Police set fire to illegal things across Tamil Nadu!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட குடியாத்தம் பேர்ணாம்பட்டு மேல்பட்டி பரதராமி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கடந்த ஆண்டு குட்கா, ஹான்ஸ், கூல்லிப் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்குகள் முடிவுள்ளது.
இந்த நிலையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் தலைமையில் சுமார் 17 லட்சம் மதிப்பிலான 1,766 கிலோ குட்கா போதை பொருட்களை பேர்ணாம்பட்டு தரைக்காடு பகுதியில் உள்ள மலைப்பகுதியில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு போதை பொருட்களை அதில் வைத்து தீயிட்டு எரித்தனர். 20க்கும் மேற்பட்ட போலீசார் மலைப்பகுதியில் குவிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
அதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்க்குப்பம், உளுந்தூர்பேட்டை, மணலூர் பேட்டை, ரிஷிவந்தியம் உள்ளிட்ட காவல்நிலையத்தில் போலீசார் சோதனையில் கடந்த சில தினங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூல் லிப், ஹான்ஸ் உள்ளிட்ட 5,000 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலை பொருட்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு அந்தந்த காவல் நிலைய பகுதியில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்தது. அவற்றை ஒரே இடத்திற்கு டிராக்டர் மூலமாக கொண்டுவரப்பட்டு இன்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முன்னிலையில் மற்றும் கள்ளக்குறிச்சி எஸ்.பி அரவிந்த் தலைமையிலான போலீசார் சின்னசேலம் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில், 10 அடி ஆழ குழி தோண்டி 5 டன் எடை கொண்ட குட்கா பொருள்கள் மற்றும் புகையிலைப பொருட்களை புதைத்து அழித்தனர்.
வேலூர், கள்ளக்குறிச்சி மட்டுமல்லாமல் திருவண்ணாமலை மாவட்டம் உட்பட தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் காவல்துறையினர் பறிமுதல் செய்து வைத்திருந்தது குட்கா உட்பட போதை பொருட்களை டன் கணக்கில் வைத்திருந்ததை நீதிமன்ற உத்தரவுப்படி அந்தந்த மாவட்டங்களில் தீ வைத்து எரித்துள்ளனர்
Follow Us