Advertisment

கடத்தல் பீடி மூட்டைகள் பறிமுதல்; போலீசார் அதிரடி

beedi

Police seize smuggled beedi bundles

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உட்கோட்டம் தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பட்டினமருதூரில் ஒரு மீன் கம்பெனி உள்ளது. இந்த மீன் கம்பெனிக்கு பின்புறத்தில் உள்ள கடற்கரையில் நேற்று (22.11.2025) 10.30 மணிக்கு பீடி இலை மூட்டைகளை, இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக TN-59-BC-0804 என்ற பதிவு எண் கொண்ட TATA ACE மற்றும் TN-37-DV-3821 என்ற பதிவு எண் கொண்ட BOLERO MAXITRUCK ஆகிய இரண்டு லோடு வாகனங்கள் பிடிபட்டுள்ளது.

Advertisment

மேலும் அந்த வாகனங்களில், சுமார் 30 கிலோ எடை கொண்ட 13 மூட்டை பீடி இலைகளுடன் இருந்த ஓட்டுனர்களான உமையராஜா, ஹபிபு  ரஹ்மான் ஆகிய இருவரும் பிடிபட்டுள்ளார்கள். க்யூ பிரிவு போலீசாரால் கைப்பற்றபட்ட பீடி இலைகள் மற்றும் டிரைவர்கள் ஆகியோர் தூத்துக்குடி சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. கைப்பற்றபட்ட பீடி இலைகள் மதிப்பு சுமார் 15 இலட்சம் ஆகும்.

Advertisment
beedi leaf police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe