பெங்களூரை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளருக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்தாக ஈவிபி நிறுவனத்தின் உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி மீது புகார் கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னையில் ஈவிபி பிலிம் சிட்டி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கத்தில் அமைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளரான சந்தோஷ் ரெட்டி, பிக்பாஸ் போன்ற பல நிகழ்ச்சிகளுக்கும், திரைப்பட படப்பிடிப்பிற்கும் வாடகைக்கு விட்டு வருகிறார். இவரது முதல் மனைவி, விவாகரத்து செய்துள்ள நிலையில், இரண்டாவது மனைவியும் தற்போது இவர் மீது புகார் கொடுத்து விவாகரத்தும் கேட்டு நீதிமன்றத்தை நாடி வருகிறார்.

Advertisment

இந்த சூழ்நிலையில், மதுக்கு அடிமையாகி வளம் வந்த சந்தோஷ் ரெட்டி, தன்னுடைய முதல் மனைவியின் மகளுடன் வசிந்து வந்துள்ளார். அவரும் இவருடைய நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் இவரை விட்டு சென்றுள்ளார். இந்த சூழ்நிலையில் தான், தன்னுடைய மகளின் நண்பரரான பெண் ஆடை வடிவமைப்பாளர் ஒருவரை தொடர்புக்கொண்டு தன்னுடைய மகள் தன்னை விட்டு சென்றதாகவும், அவரிடம் பேசி என்னிடம் பேசவைக்குமாறு உதவி கேட்டு சென்றுள்ளார். அதன்படி, பெங்களூரில் உள்ள ஆடை வடிவமைப்பாளரின் வீட்டிற்கு சென்ற சந்தோஷ், அங்கு தகாத முறையில் நடந்துக் கொள்ள முற்பட்டுள்ளார். அதன் பிறகு அவர்,  தன்னை மனைவியும் மகளும் விட்டு சென்று விட்டார்கள், இனி நீதான் எனக்கு, உன்னை செளரியகமாக வைத்துக் கொள்வேன் என மனமுருகி பேசுவது போல் பேசியுள்ளார். அதற்கு ஆடை வடிவமைப்பாளர் மறுத்து பேசியதால், தன்னை நீ ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் உங்களின் குழந்தைகளை கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். மேலும், அந்த பெண்ணுக்கு வாட்ஸ் அப் சாட் மூலமாகவும், போன் மூலமாகவும் ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளார்.

அச்சத்தில் இருந்த அந்த ஆடை வடிவமைப்பாளர், பெங்களூரில் உள்ள காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், பெங்களுர் போலீசார் சந்தோஷை தேடி வருகிறார்கள். இது சம்மந்தமாக பெங்களூர் போலீஸ் சென்னையில் விசாரித்த போது, ஆவடியில் விபத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் காவலரோடு பிரச்சனை செய்து புழல் சிறையில் இருந்துள்ளார் என்றும் அதேபோல் ஈவிபி நிறுவனத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்து, அந்த இடத்திற்கு வேறு ஒருவருக்கு வாடகைக்கு கொடுத்து வசூல் செய்த விவகாரம் குறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணையை செய்து வருகிறார்கள் என்பது தெரியவந்தது. 

Advertisment