திருவாரூரில் பணம் கேட்டு மிரட்டல் விட்ட விசிகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் ஜெயபால் என்பவர் பர்னிச்சர் கடை ஒன்றை நடத்தி வைத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி கடையின் உரிமையாளர் ஜெயபால் வெளியே சென்றிருந்த நிலையில் கடைக்கு வந்த விசிகவினர் சிலர் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் மற்றும் மதச்சார்பின்மை நாளுக்காக நிதி வேண்டும் என பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

கடையின் உரிமையாளர் இல்லாத நிலையில் கடையில் இருந்த பெண் ஊழியர் பணம் கொடுக்காத காரணத்தால் கடையை அடித்து உடைத்து விடுவோம் கடையின் நடுத்த விடமாட்டோம் என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி  வைரலானது. இந்நிலையில் கடையின் உரிமையாளர் ஜெயபாலன் திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் நேரடியாக சென்று புகார் அளித்தார். அந்த புகார் அடிப்படையில் திருவாரூர் தாலுகா காவல்துறையினர் மிரட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.