புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வடமாநில இளைஞர்கள் தினக்கூலி வேலை செய்து வருகின்றனர். குறைந்த கூலிக்காக பணியமர்த்தப்படும் இவர்களால் பல இடங்களில் பிரச்சனைகளும் எழுந்துள்ளது.

Advertisment

அந்த வகையில், கறம்பக்குடி பகுதியில் உள்ள ஒரு ஹாலோ பிளாக் தயாரிக்கும் இடத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திர கமாங்கா (23) என்ற இளைஞர் வேலை செய்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த 15 சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கத்தால் அந்த சிறுமி கர்ப்பமாகி உள்ளார். இது தெரிந்த பெற்றோர் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

Advertisment

இது குறித்து விசாரித்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ வழக்கு பதிவு செய்து சிறுமியுடன் பழகிய மகேந்தர கமாங்காவை கைது செய்து விசாரனை செய்து இன்று (08-12-25) மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைக்க அழைத்துச் சென்றுள்ளனர். சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போக்சோ கைதி மகேந்தர கமாங்கா போலிசார் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக போலீசார் அவனது படத்தை வெளியிட்டு தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் போலீசார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.