Advertisment

விடுதி உணவை உண்ட மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்ட விவகாரம்; காவல்துறை கடும் எச்சரிக்கை!

excel-college-sp-akila

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதில், சிலர் இறந்து விட்டதாக தவறான தகவல்களை பரப்பியுள்ளனர்.எனவே இது குறித்து நாமக்கல் மாவட்ட காவல் துறை தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல் துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டம், குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்ஸல் குழும கல்வி நிறுவனங்களில் மாணவ மாணவிகள் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.

Advertisment

 இந்நிலையில் 27.10.2025 (திங்கட்கிழமை) காலை சில மாணவர்கள் வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அவர்களில் சில மாணவர்கள் எக்ஸ்ல் கல்லூரி மருத்துவ மையம் மற்றும் குமாரபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் புறநோயாளிகளாக (OP) சிகிச்சை பெற்று உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கல்லூரி விடுமுறையை தொடர்ந்து தங்களது சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்றுவிட்டனர்.

Advertisment

மாணவர்கள் அனைவரும் உடல்நலத்துடன் உள்ள நிலையில் அவர்களில் சிலர் இறந்துவிட்டதாக சமூக விரோதிகள் சிலர் சமூகத்தில் பதற்றத்தையும் மற்றும் சட்ட ஒழுங்கு  பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் எக்ஸ் வலைதலங்களில் தவறான தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில், குமாரபாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இதுபோன்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பதிவேற்றம் செய்வோர் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

students Hostel Warning health private colleges police namakkal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe