கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சியை அடுத்த அத்திப்பட்டு பகுதியில் பழைய கொள்ளிடம் ஆற்றில், தலை மற்றும் கால் துண்டான நிலையில் காயங்களுடன் ஆண் உடல் ஒன்று மிதங்கியது. போலீசார் உடலை கைப்பற்றி கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisment

குமராட்சி அருகே உள்ள அத்திப்பட்டு கிராம பகுதியில் உள்ள பழைய கொள்ளிடம் ஆறு உள்ளது. இந்த ஆற்றில் இன்று (25-02-26) தலை, கால் கை துண்டான நிலையில் காயங்களுடன் ஆண் உடல் ஒன்று மிதங்கியது. அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து இது குறித்து குமராட்சி போலீசாருக்கு தகவல் தந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

ஆற்றில் மிதங்கியவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பழைய கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் கடித்தால் உயிரிழந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற ரீதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.