வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சப்போட்டா தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பரக்கத். இவர் ரஹமதாபாத் பகுதியில் வாடகைக்கு கடை எடுத்து பீடி வேலை செய்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில், இவர் பேரணாம்பட்டு பேருந்து நிலையம் அருகே உள்ள பழக்கடைக்கு வெளியே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பழம் வாங்க உள்ளே சென்றுள்ளார். நீண்ட நேரம் கழித்து கடையின் வெளியே வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Advertisment

இது குறித்து பர்க்கத் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பேர்ணாம்பட்டு போலீசார் அந்தக் கடையின் வெளியே பொறுத்திருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அதில் மர்ம நபர் ஒருவர், தலையில் குல்லா அணிந்து மாஸ்க் போட்டுகொண்டு நீண்ட நேரம் நோட்டமிட்டு இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியிருந்தது. மேலும் சிசிடிவி காட்சியில் பதிவான காட்சியை வைத்து மர்மநபர் குறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.