இன்றைய தினம் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவைக்கு வந்திருந்தார். கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த அவர் இன்று மதியம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்பொழுது அவர் வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக அந்த பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதோடு போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டு காவல்துறை கண்காணிப்பு வளையத்தில் வந்தது . பேரிக்கார்டுகள் அமைக்கப்பட்டு அதற்கு வெளியே நின்று பொதுமக்கள் பார்வையிட்டனர். இந்நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தடையை மீறி இரண்டு இளைஞர்கள் ஸ்கூட்டியில் துணை குடியரசுத் தலைவர் சென்ற பாதையில் அதிமீறி எதிராகச் சென்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/28/a5676-2025-10-28-17-37-34.jpg)
துணை குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு வளையத்தில் அத்துமீறி நுழைந்த இரு நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் கரும்புகடை பகுதியைச் சேர்ந்த ஆஷிக் மற்றும் அனீஸ் என்று தெரியவந்தது. இவர்கள் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ள நிலையில் கஞ்சா போதையில் அத்துமீறி உள்ளே நுழைந்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/28/a5672-2025-10-28-17-04-03.jpg)