police investigate sound service business competition Photograph: (madurai)
மதுரையில் சவுண்ட் சர்வீஸ் தொழில் போட்டியில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்துள்ளது கூத்தியார்க்குண்டு என்ற பகுதி. இந்த பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா என்பது அந்த பகுதியில் விமர்சையாக நடைபெறும் ஒன்று. காளியம்மன் கோவில் திருவிழாவிற்கு எப்போதும் அந்த பகுதியில் சவுண்ட் சர்வீஸ் நடத்திவரும் பாலமுருகன் என்பவர் தான் வழக்கமாக ஒளி மற்றும் ஒலி அமைத்து கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் இந்த ஆண்டு வேறு ஒரு சவுண்ட் சர்வீஸ் நடத்திவரும் பிச்சைராஜன் என்பவர் காளியம்மன் கோவில் திருவிழாவிற்கு இலவசமாக ஒலிப்பெருக்கி அமைத்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சவுண்ட் சர்வீஸ் தொழிலதிபர்களான பாலமுருகனுக்கும், பிச்சை ராஜனுக்கும் தொழில் போட்டி ஏற்பட்டது. இந்நிலையில் பாலமுருகன் பிச்சைராஜனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கூத்தியார் குண்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாலமுருகனை போலீசார் தேடி வருகின்றனர்.
Follow Us