வேலூர் அடுத்த தொரப்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் இளைஞர் ராஜா (வயது 32). இவர் அதே பகுதியில் உள்ள தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சேலத்தில் உள்ள தனது மாமியாரை அழைத்துக் கொண்டு அரசு பேருந்தில் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கொணவட்டம் அருகே திடீரென ராஜாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. 

Advertisment

இதனையடுத்து உடனடியாக பேருந்து ஓட்டுநர் ராஜேஷ், நடத்துநர் பாலகிருஷ்ணன் ஆகியோர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். பேருந்து வேலூர் புதிய பேருந்து நிலையம் வந்த ராஜாவை மருத்துவர் பரிசோதித்தனர். அப்போது ராஜா ஏற்க்கனவே உயிரிழந்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து பயணத்தின் போது பயணி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சக பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.