திருவண்ணாமலையில் பத்திரிக்கை அச்சடிக்கும் கடைக்குள் புகுந்து மர்ம நபர் ஒருவர் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

திருவண்ணாமலை மாவட்டம் மத்தாலங்குளத்தெரு ரவுண்டானா பகுதியில் கார்த்திக் என்பவர் திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அண்மையில் வழக்கம்போல் கடையை மூடிவிட்டு சென்ற நிலையில் அடுத்த நாள் காலை கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டது அறிந்து அதிர்ந்துபோன கார்த்திக் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் காணாமல் போனது தெரியவந்தது.

Advertisment

உடனே கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை சோதனை செய்தபோது கடையின் ஷட்டரை உடைத்து மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து கல்லாவில் உள்ள 20 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற காட்சிகள் கிடைத்துள்ளது. இந்த  சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. சிசிடிசி காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட இது குறித்து கார்த்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.