சிவகாசி உட்கோட்டத்தில் தனிப்பிரிவு போலீஸ் எஸ்.ஐ.-யாக பணியாற்றி வரும் அதிகாரி ஒருவர், தனது மனைவி மற்றும் 5 மாத ஆண் குழந்தையுடன் வசித்து வருகிறார். நேற்று அதிகாலை, தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை பார்த்தபோது அது அசைவின்றி கிடந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, குழந்தையை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Advertisment

இதனிடையே, எஸ்.ஐ.-யின் மனைவியின் கையில் பிளேடு கீறல்கள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த சம்பவத்தில் சந்தேகம் எழுந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குழந்தையின் மரணம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisment