Police investigate gang that stole jewelry by cutting window bars
மதுரையில் கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்த நகைகள் கொள்ளை போவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் ஒரு பகுதியாக, கொள்ளையடிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இதில் ஒரு கும்பல் தொடர்ச்சியாக வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக மதுரையில் தல்லாகுளம், திருப்பாலை, கே.புதூர். அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில், இந்த கொள்ளையர்கள், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள தகவல்கள் வெளியாகின்றன. மதிய நேரங்களில் நோட்டமிட்டு, ஆட்களின்றி பூட்டப்பட்டுள்ள வீடுகளை குறிவைத்து இரவு நேரத்தில், நன்கு பேர் கொண்ட இந்த கொள்ளைக் கும்பல் இந்த கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியுள்ளது தெரியவந்துள்ளது. கொள்ளையடித்த பின்பு அவர்கள் பேருந்து மூலமாக ரயில் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து அவர்கள் தப்பித்து செல்வதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த டிசம்பர் 25 ஆம் நாளன்று, அந்த கும்பல் ஒரு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகிவுள்ளன. அதில், வீட்டின் அருகேயுள்ள காரின் பின்புறமாக மறைந்து சென்று வீட்டினுள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
Follow Us