police intervened DMK councilor torture flight attendant
சென்னை விமானநிலையத்தில் இருந்து இண்டிகோ விமானம் ஒன்று, இன்று டெல்லி செல்ல தயாராக இருந்தது. அப்போது, பயணிகள் அனைவரும் தங்களது இருக்கையில் அமர்ந்திருந்தனர். அந்த சமயத்தில், இரண்டு பயணிகள் தங்களது இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்திருந்த போது, அந்த வழியாக வந்த பணிப்பெண்ணை அவர்கள் கிண்டல் செய்துள்ளனர். பின்னர் அப்பெண்ணிடம், இவர்கள் இருவரும் தகாத முறையில் நடந்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த பணிப்பெண், இது குறித்து விமான நிலைய நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.
இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் இருவரும் மது போதையில் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்களது பயணம் ரத்து செய்யப்பட்டது. மேலும், புகாரின் அடிப்படையில் மீனம்பாக்கம் மகளிர் காவல்நிலையத்தில் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதில், ஒருவர் திருவள்ளூர் 6 வது வார்டு திமுக கவுன்சிலர் பிரபாகரன், மற்றொருவர் அவரது நண்பர் தியாகு என்பது தெரியவந்துள்ளது. கவுன்சிலராக பதவி வகித்து வரும் நபர், பணிப்பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us