police Photograph: (கோப்புப்படம்)
தூய்மைப் பணியாளர்களை தனியார் வசம் ஒப்படைப்பதை எதிர்த்து சென்னை மாநகராட்சியில் உள்ள ஐந்து மற்றும் ஆறாம் மண்டலத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் பல்வேறு வடிவங்களில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை ரிப்பன் மாளிகை அலுவலக வாயிலில் போராட்டம் மேற்கொண்ட தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் போராட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி ஐந்து மற்றும் ஆறு மண்டலங்களை சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் இன்று பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி பேரணியாக நடந்து செல்லும் தூய்மைப் பணியாளர்கள் முதல்வரிடம் தூய்மைப் பணியாளர்களை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது என கோரிக்கை வைக்கும் மனுவை அளிக்க உள்ளனர். இதில் உழைப்பாளர்கள் உரிமை இயக்கத்தினரும் பங்கேற்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தூய்மைப் பணியாளர்களின் இந்த பேரணி காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை பிராட்வே பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow Us