செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் துரத்திப் பிடிக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வரும் பயணிகளிடம் விலை உயர்ந்த செல்போன்களை குறி வைத்து நபர் ஒருவர் திருடுவதாக ரயில்வே ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஜோஸ்வா என்ற நபரை போலீசார் கண்காணித்து கைதுசெய்ய திட்டமிடப்பட்ட பொழுது அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.
உடனடியாக பதுங்கி இருந்த தனிப்படை போலீசார் அந்த நபரை துரத்திப் பிடித்து கைது செய்தனர். பயணிகள் ரயில் நிலையத்தில் அமர்ந்திருக்க திரைப்படத்தில் வருவதைப் போன்று ரயில்வே போலீசார் செல்போன் திருட்டில் ஈடுபட்ட ஜோஸ்வா என்ற அந்த நபரை துரத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சவாரி கேட்பதுபோல ரயில் நிலையத்திற்குள் வந்து பயணிகள் அசந்த நேரத்தில் அவர்களிடம் இருந்து செல்போன்களை பறிப்பதை வாடிக்கையாக இருந்தது தெரியவந்துள்ளது.