ஒரே மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்ளிட்ட மூன்று பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு திண்டல் அடுத்த பெரிய செங்கோடம்பாளையம், ரூபி கார்டன் பிரிவு பகுதி சேர்ந்தவர் சரவணகுமார் (32). இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சரவணகுமார் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். அவரது மனைவி இரண்டாவதாக பெண் குழந்தையை பெற்றெடுத்து தாய் வீட்டில் இருந்து உள்ளார்.
சரவணகுமாரின் தந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டதால் தந்தையின் ஆடியோ ரெக்கார்டை கேட்டு சரவணகுமார் தனிமையில் இருந்து வந்துள்ளார். மேலும் அவர் கடந்த ஒரு வாரமாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்த சூழ்நிலையில், பார்வதி சரவணகுமாருக்கு போன் செய்து உள்ளார். ஆனால் அவர் போன் எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவர், சரவணகுமாரின் அண்ணனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து வீட்டுக்கு செல்லும்படி கூறியுள்ளார். அவரும் வீட்டுக்கு சென்று பார்த்த போது கதவு உள்புறமாக தாழ்பாள் போடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, வீட்டில் ஜன்னல் வழியாக பார்த்த போது சரவணகுமார் தூக்கு போட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினரின் உதவி உடன் சரவணகுமாரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே சரவணகுமார் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு பூந்துறை சேமூர், நரிகாட்டு வலசு பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (42). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கடந்த 2022 ஆம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மனைவி இறந்ததிலிருந்து பூபதி அதிகமாக மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் பூபதி வீட்டில் தூக்கு போட்டு உள்ளார். உறவினர்கள் பூபதியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே பூபதி இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி அடுத்த கோட்டு புள்ளாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக். இவரது மனைவி ராணி (33). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடமாக ராணி, தனது தந்தையுடன் இருந்து தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மன உளைச்சலில் இருந்த ராணிக்கு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவனிடம் இருந்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இதனால் மனவிரக்தியில் இருந்த ராணி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/06/police-2025-11-06-22-14-44.jpg)