வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த அப்துல் மாலிக் என்பவர் ஆம்பூர் மற்றும் திருப்பதி பகுதியில் சொந்தமாக ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று திருப்பதியில் இருந்து ஊருக்கு வந்த அப்துல் மாலிக், பேரணாம்பட்டு பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்யில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது பணம் எடுக்க தெரியாததால் அருகில். டிப் டாப் உடை அணிந்து தலையில் தொப்பியுடன் இருந்த நபரிடம் தனது ஏடிஎம் கார்டை கொடுத்து பணத்தை எடுத்து தரும்படி அப்துல் மாலிக் கூறியதாக தெரிகிறது. அந்த நபர் அப்துல் மாலிக்கின் ஏடிஎம் கார்டை வங்கி ஏடிஎம் மிஷினில் வைத்து பணத்தை எடுக்க முயற்சி செய்து சர்வர் பிராப்ளம் என கூறியுள்ளார். அவரும் சரியென சொல்லிவிட்டு திரும்பி சென்றுள்ளார்.

Advertisment

சிறிது நேரம் கழித்து அப்துல் மாலிக் மீண்டும் அந்த ஏடிஎம்மில் மிஷினில் பணத்தை எடுக்க சென்றபோது அந்த ஏடிஎம் கார்டு வேறு நபரின் கார்ட் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக பாரத ஸ்டேட் வங்கி மேலாளரைச் சந்தித்து இதுக்குறித்து தகவல் தெரிவித்துள்ளார். மேலாளர் உடனே அப்துல் மாலிக்கின் கணக்கை செக் செய்த போது, அவரது வங்கிக் கணக்கில் இருந்து அந்த மர்மநபர் 29 ஆயிரம் பணம் எடுத்திருப்பது தெரியவந்தது.

Advertisment

இது குறித்து அப்துல் மாலிக் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, புகாரின் பேரில் போலீசார் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த மர்ம நபர் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏடிஎம் விற்கு பணம் எடுக்கச் சென்ற நபரிடம் நூதன முறையில் ஏடிஎம் கார்டு மாற்றி 29 ஆயிரம் பணத்தை அபேஸ் செய்யப்படும் சம்பவம் பேரணாம்பட்டு பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.