Advertisment

சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி!

gcc-sanitation-worker-pro

கோப்புப்படம்

பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்குத் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி (16.06.2025) மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 13 நாட்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

Advertisment

இதற்கிடையே இந்த போராட்டம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் தூய்மைப் பணியாளர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்யும் முனைப்பில் போலீசார் அங்குக் குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்யப்பட்டனர். 

இத்தகைய சூழலில் தான் போராட்டம் நடத்த அனுமதி கோரி தூய்மை பணியாளர்கள் சார்பில் காவல் துறையிடம் மனு அளித்திருந்தனர். இதனையடுத்து தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதாவது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

chennai city police permission police chennai corporation Chennai sanitary workers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe