Poet aarur TamilNadan to receive 'Shilpi' award Photograph: (kovai)
நக்கீரன் முதன்மை துணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் அவர்களுக்கு இந்த ஆண்டிற்கான கவிஞர் சிற்பி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர், புகழ்பெற்ற கல்வியாளர், இலக்கிய இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்ட ஒரு பல்துறை அறிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம். சுருக்கமாக 'சிற்பி' என அழைக்கப்படும் சிற்பி பாலசுப்பிரமணியம் கோவையை பூர்விகமாக கொண்டவர். இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர். தமிழக அரசின் பாவேந்தர் விருது, குன்னக்குடி ஆதீனம் கபிலர் விருது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க மகாகவி உள்ளூர் விருது, மூத்த எழுத்தாளருக்கான லில்லி தேவசிகாமணி விருது எனப் பல விருதுகள் பெற்றவர்.
ஒவ்வொரு ஆண்டும் சிற்பி பெயரில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சிற்பியின் 90 ஆம் அகவை விழா வரும் ஜனவரி 23, 24 ஆகிய இரண்டு நாட்கள் பொள்ளாச்சியில் நடைபெற உள்ளது. முன்னதாக இவ்விருதை அப்துல் ரகுமான், மு.மேத்தா, ஆகியோர் கடந்த வருடங்களில் பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சிற்பி விருது நக்கீரன் முதன்மை துணை ஆசிரியரும், கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் அவர்களுக்கும், கவிஞர் என்.டி.ராஜ்குமார் அவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் இருவருக்கும் பகிர்ந்தளித்து சிறப்பிக்கப்பட உள்ளது. விருது பெறுவோர்களை வாழ்த்திப் பேச குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், சிங்கப்பூர் முஸ்தபா உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். கோவை பொள்ளாச்சியில் உள்ள கே.கே.ஜி கல்யாண மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
Follow Us