நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த 48 வயதான கூலித்தொழிலாளி மது குடிக்கிற பழக்கம் உள்ளவராம். இவரின் 14 வயது மகள் 9ம் வகுப்பு பயின்று வருபவர். இந்தச் சிறுமி தன் 13ஆம் வயதில் கடந்த ஆண்டு 8ஆம் வகுப்பு படித்த போது நள்ளிரவில் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவரை அவரது தந்தையே மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மிரண்டு நின்ற மகளை வெளிய சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

Advertisment

இதையடுத்து அடுத்த பிப்ரவரி மாதம் அந்தச் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட அவரது தாயார் அந்தப் பகுதியிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றும் சரிப்பட்டு வராத நிலையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார். அங்கே நடத்தப்பட்ட சோதனையில் சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியாகிப் போன சிறுமியின் தாயார் அவர் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த பிப்13ஆம் தேதி நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். சிறுமியின் தந்தை மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இதனிடையே பிப் 17ம் தேதி சிறுமிக்கு குறை மாதத்தில் ஆண்குழந்தை பிறந்து மறு நாளே உயிரிழந்தது.

Advertisment

சம்பவத்தால் மாவட்டமே அதிர்ந்து போன இந்த வழக்கை அப்போதைய நாங்குநேரி ஏ.எஸ்.பி. பிரசன்னகுமார், இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் டீம் ஒருங்கிணைந்து, விசாரணையை சிந்தாமல் சிதறாமல் கொண்டு சென்றதோடு, வழக்கில் அறிவியல் பூர்வமான ஆதாரத்தை திரட்ட இறந்த குழந்தையின் உடலில் இருந்து டி.என்.ஏ.பரிசோதனைக்காக மாதிரிகள், பயாப்சிக்கள் சேகரிக்கப்பட்டு மாதிரிகளை தாமதமில்லாமல் ஆய்விற்காக அனுப்பியிருக்கிறார்கள்.

siren-arrested

இதையடுத்து கடந்த அக்டோபர் 30 அன்று வெளியான பரிசோதனை முடிவில் அந்தச் சிறுமியின் கர்ப்பத்திற்கு தந்தை தான் காரணம் என்பது குழந்தையின் மரபணு மூலம் உறுதியாகியிருக்கிறது. இப்படி குற்றத்தை நிரூபிப்பதற்கான உடைக்க முடியாத ஆணித்தரமான ஆவணங்கள், சாட்சியங்களை காலதாமதிமின்றி எந்த ஒரு இடத்திலும் வழுக்காமல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்கள் விசாரணை போலீசார். அதோடு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் உஷாவும் சிறப்பாகவும் செயல்பட்டிருக்கிறார். இந்தக் குழுவினரின் கூட்டு பங்களிப்பின் காரணமாக விசாரணைக்குப் பின் இந்த வழக்கில் 10 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த வழக்கின் நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நிதிமன்ற நீதிபதியான சுரேஷ்குமார் டிசம்பர் 24 அன்று வழங்கிய தீர்ப்பில், அரிதிலும் அரிதான வழக்கு. தந்தை என்பவர் தனது குழந்தைக்குப் பாதுகாப்பாகவும், அரணாகவும் இருக்க வேண்டியவர். ஆனால் இந்த வழக்கில் அவரே குற்றவாளியாகி தனது மகளின் நம்பிக்கையை சிதைத்து கொடுமை படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பிறந்த குழந்தைக்கு அவரது தந்தை தான் காரணம் என்பது. அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. என் தந்தை எனது குழந்தைப் பருவத்தை அழித்து விட்டார். அவருக்கு கருணை காட்டக் கூடாது என்று சிறுமி அளித்த வாக்குமூலம் மிகவும் வேதனக்குரியது.

judgement

இது போன்ற கொடூர குற்றங்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்குவதன் மூலமே சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்க முடியும் எனவே குழந்தை பாதுகாப்பை உறுதி செய்ய இந்த தீர்ப்பு அவசியமாகிறது என்று குற்றவாளியான தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளார். நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அளித்த முதல் தூக்கு தண்டனை தீர்ப்பு. 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு போக்சோ சிறப்பு நீதின்றம் தூக்கு தண்டனை வழங்கியது நெல்லை மாவட்டத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி அளித்த ரெண்டு வரி வாக்கு மூலம் வேதனையில் கேட்பவர்களின் மனதை நொறுக்கியிருக்கிறது.