செங்கல்பட்டு மாவட்டம் மதுராங்கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டம் இன்று (23.01.2026) நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “துரோக திமுக ஆட்சியை, கொடுங்கோல் திமுக ஆட்சியை, ஊழல் திமுக ஆட்சியை விரட்டி அடிப்போம். வீட்டுக்கு அனுப்புவோம் என்று வீர முழக்கத்தோடு வருகை தந்திருக்கின்ற அனைவருக்கும் வணக்கம்.
திமுக ஆட்சியின் முடிவுக்கு இன்று ஒரு தொடக்கம். இங்கே வருகை தந்திருக்கின்ற லட்சோப லட்ச தொண்டர்களே திமுக அரசு என்றாலே ஒரு ஊழல் அரசு. கொடுங்கோல் அரசு. பெண்களுக்கு எதிரான ஒரு ஆட்சி. கஞ்சா ஆட்சி. சாராய ஆட்சி எல்லாவற்றுக்கும் மேல் திமுக ஆட்சி என்றாலே அது ஒரு பூஜ்ஜியம் ஆட்சி. ஜீரோ கவர்மெண்ட். ஜீரோ கவர்னன்ஸ். கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீர் பாசன திட்டங்கள் எவ்வளவு தெரியுமா?. பூஜ்ஜியம்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் திமுக அரசில் கொண்டு வரப்பட்ட புதிய மாவட்டங்கள் எவ்வளவோ பூஜ்யம். ஐந்தாண்டு காலத்தில் கொண்டு வரப்பட்ட புதிய மருத்துவ கல்லூரிகள் எவ்வளவோ பூஜ்யம். ஐந்தாண்டு காலத்தில் உருவாக்கப்பட்ட எம்.பி.பி.எஸ். இடங்கள் எவ்வளோ? பூஜ்யம். ஐந்தாண்டு காலத்தில் எத்தனை கல்லூரி?. இணை பேராசிரியர்கள் நியமன செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்று பார்த்தால் பூஜ்ஜியம். ஐந்தாண்டு காலத்தில் புதிய மின் திட்டங்கள் கொண்டு வரப்பட்டது எவ்வளோ?. பூஜ்ஜியம். இது ஒரு பூஜ்ஜியம் அரசு. தகுதி இல்லாதவர்கள், திறமை இல்லாதவர்கள், நேர்மை இல்லாத, திமுக ஆட்சியை. துரத்தி அடியுங்கள்,
விரட்டி அடியுங்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/23/cm-mks-sad-2026-01-23-18-07-37.jpg)
ஆனால் ஒன்றில் மட்டும் முதல் இடத்தில் இருக்கின்றார்கள். அதிலும் இந்தியாவிலே முதல் இடத்தில் இருக்கின்றார்கள். ஊழல்... ஊழல்... ஊழல் என்றாலே அதற்கு மறுபெயர் திமுக. அடிக்கிக் கொண்டே போகலாம். மணல் கொள்ளையால் நடந்த ஊழல் எவ்வளோ 4750 கோடி. ரூபாய் நகராட்சி துறையிலே பொறியாளர்கள் நியமனம் ஊழல் 888 கோடி ரூபாய். அதே துறையிலே ஒப்பந்த ஊழல் எவ்வளோ 2000 கோடி ரூபாய் ஊழல். அதே துறையிலே பணியிட மாற்றம் ஊழல் டிரான்ஸ்பருக்கு ஒரு துறையிலே ஒரு மாதத்துல 366 கோடி ரூபாய்
டாஸ்மாக் விற்பனை ஊழல் வரி எய்ப்பு ஊழல் 1,82,000 கோடி ரூபாய். டாஸ்மார்க் மது பாட்டில் 10 ரூபா பாட்டில் யார் செந்தில் பாலாஜிதான். அதில் எவ்வளவு ஊழல் 5000 கோடி. கனிம வள ஊழல் எவ்வளவு 2500 கோடி. நெல் கொள்முதல் ஊழல் எவ்வளவு 1270 கோடி இப்படி ஒவ்வொரு துறையிலும் நான் சொல்றதுல்லாம் மேலோட்டமா சொல்லிட்டு இருக்கிறேன். 6 லட்சம் கோடி ரூபாய் இந்த 5 ஆண்டு காலத்தில் ஊழல் செய்த திமுக ஆட்சியை தமிழக மக்களே துரத்தி அடியுங்கள். இவர்கள் வேண்டாம் நமக்கு வேண்டாம்” எனப் பேசினார்.
Follow Us