Advertisment

பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேச்சு!

Benjamin-Netanyahu-modi

அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்ற அணுசக்தி ஒப்பந்தம் தோல்வியடைந்ததை அடுத்து, இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, இஸ்ரேல் மீது பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. அதனை தொடர்ந்து, அமெரிக்க நட்பு நாடுகளான பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. 

Advertisment

மேலும் துபாயில் உள்ள அமெரிக்க ராணுவப் படைகளை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதே சமயம் ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி (வயது 86) அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதன் காரணமாக ஈரானில் 40 நாட்கள் பொது துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், 7 நாட்கள் பொது விடுமுறையும் விடப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. 

Advertisment

அதே போன்று ஈரான் ராணுவத்தின் தலைமைத் தளபதி சையித் அப்தோல்ரஹீம் மௌசவி, ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அஸீஸ் நாசிர்ஸதேஹ் ஆகியோரும் அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு உறுதி செய்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் முன்னாள் அதிபர் மகுமுத் அகமதிநெச்சாத் படுகொலை செய்யப்பட்டதாக ஈரான் அரசு அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் லெபனான் நாட்டின் மீது இஸ்ரேலிய படைகள் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அதாவது லெபனான் நாட்டில் உள்ள  ஹிஸ்புல்லா அமைப்பின் இடங்களைக் குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக லெபனான் நாட்டு மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் சுமார் 31 பேர் கொல்லப்பட்டனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஈரான் மீதான தாக்குதலைக் கண்டித்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

modi-speech
கோப்புப்படம்

இதற்கிடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தற்போதைய பிராந்திய நிலைமை குறித்து விவாதிப்பதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். இந்த உரையாடலின் போது, சமீபத்திய நிகழ்வுகள் குறித்த இந்தியாவின் கவலைகளைத் தெரிவித்த பிரதமர் மோடி, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், மோதல்களை விரைவில் நிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டையும் பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார் எனக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தற்போதைய பிராந்திய நிலைமை குறித்து விவாதிக்க பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசினேன். சமீபத்திய நிகழ்வுகள் குறித்த இந்தியாவின் கவலைகளைத் தெரிவித்ததோடு, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினேன். மோதல்களை விரைவில் நிறுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Narendra Modi israel Benjamin Netanyahu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe