இந்தாண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 01ஆம் தேதி (01.12.2025)  தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு விழா குறித்த விவாதம் மக்களவையில் இன்று (08.12.2025) தொடங்கியது. இந்த விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். அதன்படி  மக்களவையில் பிரதமர் மோடி பேசுகையில், “‘வந்தே மாதரம்; என்பது சுதந்திரப் போராட்டத்திற்கு ஆற்றலையும், உத்வேகத்தையும், தியாகம் மற்றும் தவத்திற்கான பாதையையும் வழங்கிய ஒரு மந்திரம். ஒரு முழக்கம் ஆகும். 

Advertisment

‘வந்தே மாதரம்’ பாடல் 150 ஆண்டுகளை நிறைவு செய்வதைக் காண நாம் சாட்சிகளாக இருப்பது பெருமைக்குரிய விஷயம். இது ஒரு வரலாற்றுத் தருணம். பல வரலாற்று நிகழ்வுகள் மைல்கற்களாகக் கொண்டாடப்படும் ஒரு காலம் இது. நாம் சமீபத்தில் நமது அரசியலமைப்பின் 75வது ஆண்டைக் கொண்டாடினோம். சர்தார் படேல் மற்றும் பிர்சா முண்டா ஆகியோரின் 150வது பிறந்தநாளை நாடு கொண்டாடுகிறது குரு தேக் பகதூர் ஜியின் 350வது தியாகத் தினத்தையும் நாம் கொண்டாடுகிறோம். இப்போது நாம் "வந்தே மாதரம்" பாடலின் 150வது ஆண்டைக் கொண்டாடுகிறோம். சுதந்திரப் போராட்டத்தின் போது வந்தே மாதரம் என்ற மந்திரம் முழு நாட்டிற்கும் சக்தியையும், உத்வேகத்தையும் அளித்தது. 

Advertisment

இந்த முக்கியமான விவாதத்தில் கூட்டாகப் பங்கேற்றதற்காக அவை உறுப்பினர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்த வந்தே மாதரம் பற்றி நாம் விவாதிப்பது முக்கியம். வந்தே மாதரம் 50 ஆண்டுகளை நிறைவு செய்தபோது, ​​நாடு காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது. அதன் 100வது ஆண்டு விழாவில் நாடு அவசரநிலையின் கீழ் இருந்தது. லட்சக்கணக்கானோர் வந்தே மாதரம் முழங்கி சுதந்திரத்திற்காகப் போராடியதால் நாங்கள் இங்கே அமர்ந்திருக்கிறோம். இன்று புனிதமான வந்தே மாதரத்தை நினைவு கூர்வது இந்த அவையில் உள்ள நம் அனைவருக்கும் பெரிய பாக்கியம்” எனப் பேசினோம்.