Advertisment

“அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நன்றி...” - பிரதமர் மோடி!

modi-trumph-1

கோப்புப்படம்

இந்தியா - அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக இரு நாடுகளும் கூட்டாக அறிவித்துள்ளன. இந்த ஒப்பந்த நடவடிக்கையின் மூலமாக இந்தியா மீதான அமெரிக்காவின் வரி 18%மாக குறைந்துள்ளது. இதன் மூலமாக  ஜவுளி, தோல், ரசாயன பொருட்களின் மீதான வரி குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் என அமெரிக்க தெரிவித்திருந்த நிலையில் இந்திய பொருட்கள் மீதான 25% கூடுதல் வரியை அமெரிக்கா அதிபர் டிரம்ப் ரத்து செய்திருந்தார். அதாவது ஏற்கனவே வழக்கமான வரியான 25%த்தில் இருந்து 18 ஆக குறைக்கப்பட்ட நிலையில் கூடுதலாக விதிக்கப்பட்ட 25% வரியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Advertisment

இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு ஒரு நற்செய்தி. நமது இரு பெரும் நாடுகளுக்கு இடையே ஓர் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். நமது நாடுகளுக்கு இடையிலான வலுவான உறவுகளுக்காக அதிபர் ட்ரம்ப் காட்டும் தனிப்பட்ட ஈடுபாட்டிற்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

இந்தக் கட்டமைப்பு, நமது கூட்டாண்மையின் வளர்ந்து வரும் ஆழம், நம்பிக்கை மற்றும் வேகத்தைப் பிரதிபலிக்கிறது. இது இந்தியாவின் கடின உழைப்பாளிகளான விவசாயிகள், தொழில்முனைவோர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSMEs), புத்தாக்க நிறுவனங்கள் (StartUp), மீனவர்கள் மற்றும் பலருக்குப் புதிய வாய்ப்புகளைத் திறந்து விடுவதன் மூலம் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ (Make in India) திட்டத்தை வலுப்படுத்துகிறது. இது பெண்கள் மற்றும் இளைஞர்களுக்குப் பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். 

india-us-deal

இந்தியாவும் அமெரிக்காவும் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதில் பொதுவான உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளன. இந்தக் கட்டமைப்பு நமக்கிடையிலான முதலீடு மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மைகளை மேலும் ஆழப்படுத்தும். மேலும், இது நெகிழ்வான மற்றும் நம்பகமான விநியோகச் சங்கிலிகளை (Supply Chains) வலுப்படுத்துவதுடன் உலகளாவிய வளர்ச்சிக்கும் பங்களிக்கும். இந்தியா ‘விக்சித் பாரத்’ (வளர்ந்த இந்தியா) நோக்கிய பயணத்தில் முன்னேறும்போது, எதிர்காலத்தை மையமாகக் கொண்ட, நமது மக்களுக்கு அதிகாரமளிக்கும் மற்றும் பொதுவான செழிப்பிற்குப் பங்களிக்கும் உலகளாவிய கூட்டாண்மைகளை உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

trade Agreement usa America India PRESIDENT DONALD TRUMP Narendra Modi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe