ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் மன் கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சி அகில இந்திய வானொலி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் அதன் 131வது அத்தியாயம் இன்று ( 22.022026) ஒளிபரப்பானது. இதில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் விவசாயம் மற்றும் கால்நடை மருத்துவத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் உள்ளிட்டப் பல்வேறு தலைப்புகளில்   பிரதமர் மோடி உரையாற்றினார்.

Advertisment

அப்போது அவர் பேசுகையில், “நமது நாட்டில், சமூக நலனுக்காகப் பணியாற்றியவர்கள். தங்களின் நற்பணிகளில் பொதுமக்களுக்கே முன்னுரிமை அளித்தவர்கள் எப்போதும் மக்களின் இதயங்களில் நீங்காத இடத்தைப் பிடித்திருப்பார்கள். (அம்மா) ஜெயலலிதா அத்தகைய மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவர். பிப்ரவரி 24ஆம் தேதி அவருடைய பிறந்தநாள் ஆகும். இன்றும் நான் தமிழகத்திற்குச் செல்லும்போதெல்லாம், ஜெயலலிதா மீது தமிழக மக்கள் வைத்திருக்கும் ஆழமான அன்பை என்னால் உணர முடிகிறது. 

Advertisment

ஜெயலலிதாவின் பெயரைக் குறிப்பிட்டாலே தமிழக மக்களின் முகங்களில் ஒரு பொலிவு உண்டாகிறது. குஜராத்தில் நான் பதவியேற்ற விழாக்களில் அவர் கலந்து கொண்டார். அவருடைய சிந்தனை மிகவும் தெளிவானதாக இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை அதிமுக மற்றும் பாஜக மீண்டும் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளனர்.  தமிழகத்தில், என்.டி.ஏ. கூட்டணி எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.