“சோழர் காலத்தில் இந்தியா அடைந்த பொருளாதார, இராணுவ வளர்ச்சிகள் நம்மை ஊக்கப்படுத்துகின்றன” - பிரதமர்!

modi-ariyalur-speech-1

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நாளான 23ஆம் தேதி முதல் முப்பெரும் அரசு விழாவாக ராஜேந்திர சோழனால் வடிவமைக்கப்பட்ட சோழிஸ்வரர் ஆலய வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்த நாளான முப்பெரும் விழாவின் கடைசி நாளான இன்று (27.07.2025) பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இதில் பிரதமர் மோடி, ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தையும் வெளியிட்டார். 

அப்போது ‘ஓம் சிவோஹம்’ என்ற பாடலைக் கேட்டு இளையராஜாவைப் பிரதமர் மோடி பாராட்டினார். அதோடு இளையராஜாவின் பக்தி இசை நிகழ்ச்சியை மனமுருகி  பிரதமர் மோடி ரசித்தார். அதோடு 4ஆம் திருமுறை மற்றும் ஓதுவார்கள் பாடிய திருப்புகழ் பாடலை கேட்டு பிரதமர் மோடி ரசித்தார். சோழப் பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழனைக் கௌரவிக்கும் வகையில் பிரதமர் மோடி நினைவு நாணயத்தை வெளியிட்டார். இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி “வணக்கம் சோழ மண்டலம்” எனக் குறிப்பிட்டுப் பேசுகையில், “இன்று மீண்டும் ஒருமுறை காசியில் இருந்து கங்கை நீரை இங்கு கொண்டு வரப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நான் காசியிலிருந்து வந்த மக்கள் பிரதிநிதி. எனக்கு கங்கை மாதாவுடன் தொடர்பு இருக்கிறது. சோழ மன்னர்களின் இந்தப் படைப்புகள், அவை தொடர்பான இந்த நிகழ்வுகள் ஒரே இந்தியா சிறந்த இந்தியா என்ற கொள்கைக்கான புதிய ஆற்றலையும், புதிய சக்தியையும், புதிய உத்வேகத்தையும் தருகின்றன. இன்று, உலகம் நிலையற்ற தன்மை, வன்முறை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பிரச்சினைகளால் போராடிக்கொண்டிருக்கும் போது, சைவக் கொள்கைகள் நமக்குத் தீர்வுகளுக்கான பாதையைக் காட்டுகின்றன. அன்புதான் சிவன். இன்று உலகம் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டால் பெரும்பாலான நெருக்கடிகள் தானாகவே தீர்க்கப்படும். 

இந்தியா இந்தக் கருத்தை ஒரு உலகம், ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்ற வடிவத்தில் முன்னெடுத்துச் செல்கிறது. சோழர் காலத்தில் இந்தியா அடைந்த பொருளாதார மற்றும் இராணுவ வளர்ச்சிகள் (உயரங்கள்) இன்றும் நம்மை ஊக்கப்படுத்துகின்றன. ராஜராஜ சோழன் ஒரு சக்திவாய்ந்த கடற்படையை உருவாக்கினார். அதனை ராஜேந்திர சோழன் மேலும் வலுப்படுத்தினார். சோழப் பேரரசு வளர்ந்த இந்தியாவிற்கான ஒரு பண்டைய சாலை வரைபடம் போன்றது. வளர்ந்த இந்தியாவை (Viksit Bharat) உருவாக்க வேண்டுமானால் நமது கடற்படை, பாதுகாப்புப் படைகளை வலுப்படுத்தி, புதிய வாய்ப்புகளை ஆராய வேண்டும் என்று அது நமக்குச் சொல்கிறது. 

இன்றைய இந்தியா தனது பாதுகாப்பை மிக முக்கியமானதாகக் கருதுகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை யாராவது தாக்கினால் இந்தியா தனது சொந்த மொழியில் (வழியில்) எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பதை உலகம் கண்டது. இன்றைய இந்தியா தனது பாதுகாப்பை மிக முக்கியமானதாகக் கருதுகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை யாராவது தாக்கினால் இந்தியா தனது சொந்த மொழியில் எவ்வாறு செயல்படுகிறது. பதிலளிக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பதை உலகம் கண்டது. சிந்தூர் நடவடிக்கை நாடு முழுவதும் ஒரு புதிய உத்வேகத்தைத் தூண்டியுள்ளது. புதிய தன்னம்பிக்கையை விதைத்துள்ளது. மேலும் இந்தியாவின் வலிமையையும் உறுதியையும் உலக நாடுகள் ஒப்புக்கொள்ளும்படி செய்துள்ளது.

Ariyalur Chola Narendra Modi
இதையும் படியுங்கள்
Subscribe