Advertisment

“நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு பெருமைமிக்க தருணம்” - பிரதமர் மோடி!

modi-speech-central-vista-entrance

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (28.01.2026) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர், வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதன் ஒருபகுதியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் நேற்று உரையாற்றினார். இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தின் அடையாளமாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று (29.01.2026) உரையாற்றினார். 

Advertisment

அப்போது அவர், “குடியரசுத் தலைவரின் நேற்றைய உரை 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையின் வெளிப்பாடாகவும், அவர்களின் திறன்கள் மற்றும் அவர்களின் விருப்பங்களின் வரைபடமாகவும், குறிப்பாக இளைஞர்களின் வெளிப்பாடாகவும் இருந்தது. அனைத்து எம்.பி.க்களுக்கும், குடியரசுத் தலைவருக்கு வழிகாட்ட பல விஷயங்களையும் கூறினார். அமர்வின் தொடக்கத்திலும் 2026ஆம் ஆண்டிலும், குடியரசுத் தலைவர் வெளிப்படுத்திய எதிர்பார்ப்புகள் - அனைத்து எம்.பி.க்களும் இதை தீவிரமாக எடுத்துக் கொண்டனர் என்று நான் நம்புகிறேன். 

Advertisment

21 ஆம் நூற்றாண்டின் கால் பகுதி கடந்துவிட்டது. இது அடுத்த காலாண்டின் தொடக்கம். 2047 ஆம் ஆண்டுக்கான (Viksit Bharat 2047) விடுதலைப் பாரதத்தின் இலக்கை அடைவதற்கான இந்த 25 ஆண்டுகளின் முக்கியமான கட்டம் தொடங்கியுள்ளது. இந்த நூற்றாண்டின் இரண்டாவது காலாண்டின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் முதல் நிதியமைச்சர் ஆவார். தொடர்ந்து 9வது முறையாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நாட்டின் முதல் பெண் நிதியமைச்சர் ஆவார். இது நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு பெருமைமிக்க தருணமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். 

central-vista-1

மேலும், இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நம்பிக்கை, போட்டித்தன்மை மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட இந்தியாவை நோக்கிய திசையில் இது ஒரு முக்கிய படியாகும் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்று கூறினார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026 - 2027ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி (01.02.2026) தாக்கல் செய்ய உள்ளார். 

budget session central vista Narendra Modi Nirmala Sitharaman union budget Budget 2026
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe