தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டைத் தொடங்கி வைக்க கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்த பிரதமர் மோடி மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வகையில் கோவை விமான நிலையத்தில் பாஜக சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் வரவேற்றனர். அதே போன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் பிரதமர் மோடியை வரவேற்றனர். 

Advertisment

அதே சமயம் தமிழக அரசு சார்பில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பிரதமர் மோடியை வரவேற்றார். மேலும் பிரதமர் மோடியை வரவேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வரவேற்றார்.இதனையடுத்து விமான நிலையம் முதல் கோவை கொடிசியா வளாகம் வரை சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பாஜக தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து கொடிசியா வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இயற்கை வேளாண் கூட்டமைப்பு கண்காட்சியைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

Advertisment

அப்போது பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக இயற்கை வேளாண் கூட்டமைப்பு மாநாட்டைத் தொடங்கி வைத்தார். மேலும், இயற்கை விவசாயிகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகள், உற்பத்தி பொருட்களைப் பிரதமர் மோடி பார்வையிட்டார். இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடிக்கும் அதிகமான தொகையை, பி.எம். கிஷான் (PM-KISAN) திட்டத்தின் 21வது தவணையைப் பிரதமர் மோடி வெளியிட்டார்.