ஜப்பான் நாட்டின் பிரதமராக சனே டகாய்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதவியேற்றார். இருப்பினும் நாடாளுமன்றத்தில் அவரது கூட்டணிக்குக் குறைந்த பெரும்பான்மையே உள்ளது எனக் கூறப்பட்டது. இதனையடுத்து சனே டகாய்ச்சி, நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தும் முடிவை எடுத்திருந்தார். இதனையடுத்து, அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
இதற்கான உத்தரவை பிரதமர் சனே டகாய்ச்சி பிறப்பித்திருந்தார். அதோடு பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்தார். இத்தகைய சூழலில் தான் ஜப்பானில் நேற்று (08.02.2026) தேர்தல் நடைபெற்றது. அதன்படி வாக்குப்பதிவு நடபெற்றது. இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் ஆளும் எல்.டி.பி. கட்சி பெரும்பாண்மை பெற்று சனே டகாய்ச்சி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜப்பான் பெண் பிரதமர் என்ற பெருமையையும் சனே டகாய்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற சனே டகாய்ச்சி உலக நாடுகளில் இருந்து பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/09/modi-ani-mic-2026-02-09-08-28-45.jpg)
அந்த வகையில் பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் நீங்கள் பெற்ற மைல்கல் வெற்றிக்காக சனே டகாய்ச்சிக்கு வாழ்த்துக்கள். உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்துவதில் நமது சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் திறமையான தலைமையின் கீழ், இந்தியா - ஜப்பான் நட்பை நாம் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்வோம் என்று நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/09/modi-jappan-pm-isan-daisy-2026-02-09-08-28-17.jpg)