தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதி பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Advertisment

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி எம்.பி.,வரும் 28ஆம் தேதி (28.01.2026) தமிழ்நாடு வருகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிராம கமிட்டி மாநாட்டில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 

Advertisment

அதே சமயம் கன்னியாகுமரியில் 28ஆம் தேதி நடைபெற உள்ள பாஜக கூட்டம் ஒன்றில்  பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்க உள்ளார். அந்த கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களைப் பிரதமர் மோடி அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் ராகுல் காந்தியும், பிரதமர் மோடியும் தமிழகம் வர இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.