தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த ஆயத்தமாகி வருகிறது. 

Advertisment

இந்நிலையில் தவெகவை சேர்ந்த மதுரை மாவட்ட பெண் நிர்வாகி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ''மதுரை தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவியாக இருந்த என்னை அந்த போஸ்டிங்கில் இருந்து எடுத்துவிட்டு முத்துலட்சுமி என்கின்ற பெண்ணை போட்டுள்ளார்கள். முதலில் அமைப்பாளர், இணை அமைப்பாளர் என்று வரிசையாக வரும். எனக்கு கீழ் ஒருவரை நான் வைத்திருந்தேன். ஆனால் அவர்களை எடுத்துவிட்டு முத்துலட்சுமி என்பவரை போட்டே ஆக வேண்டும் என்று சொல்லி எனக்கே தெரியாமல் தலைமையில் நேம் கொடுத்திருக்கிறார்கள். அதை ஏன் என்று கேட்டதற்கு 'நீ யார்?' என்று என்னிடம் சண்டை போட்டார்கள். கேஸ்ட் வைஸ் பார்க்கும் பொழுது உன்னையும் தூக்கிவிட்டு முத்துலட்சுமியை தான் வைப்பார்கள் என்று சொன்னார்கள். அப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள் என்று நினைத்தேன்.

Advertisment

16 லட்சம் கொடுத்தேன். அதில் வரும் வட்டியை தருகிறேன் என்று சொன்னார். அவரிடம் காசு கொடுத்து சரியான வட்டி வரவில்லை. தயவு செய்து எனக்கு கிடைக்க வேண்டிய பணத்தை வாங்கி கொடுத்து விடுங்கள். நான் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் கேட்கும் ஐந்து லட்சம், பத்து லட்சம் பணத்தை யார் தூக்கி கொடுக்கிறார்களோ அவர்களுக்கே பதவி. என்கிட்டயே வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். நீ காசு கொடுத்தால் உனக்கு பதவி, முத்துலட்சுமி பணம் கொடுத்தால் முத்துலட்சுமிக்கு பதவி. அதேபோல முத்துலட்சுமி என்னை விட அதிகமாக பணம் கொடுத்திருக்கிறார்கள். அதனால் அவருக்கு பதவி போய்விட்டது. இந்த மாதிரியான நிலை கட்சியில்  நிறைய பேருக்கு நடக்கிறது. அதனால் தயவு செய்து இப்பொழுதே ஊழல் கட்சியாக மாற்றி கட்சி பெயரை கெடுக்க வேண்டாம்.

இப்போது வரைக்கும் கட்சி மேல் மரியாதை இருக்கிறது. உன் இடத்தில் வேறு ஆளை போட்டு விட்டோம். நீ இணை அமைப்பாளராக இரு அல்லது இதை விட்டு விலகிடு அல்லது வேறு ஏதாவது ஒரு பதவி எடுத்துக்கோ என்கிறார்கள்.  நான் சொல்லிவிட்டேன் நான் நேம் ஆகிவிட்டேன். நான்தான் மகளிர் அணியை சேர்ந்த தலைவி என்று எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. என்னுடைய முகமும் தெரிந்துவிட்டது. இந்த நேரத்தில் நீங்கள் ப்படி மாற்றிவீர்கள் என்று கேட்டால் புஸ்ஸி ஆனந்த் அண்ணன் தான் மாற்ற சொன்னார்கள் என்று சொல்கிறார்கள். ஆனந்த் அப்படிப்பட்டவர் கிடையாது. அப்படி என்றால் இந்த போஸ்டிங்கில் நான் இருக்கக்கூடாதா  வேலைக்கு போகக் கூடாதா? பிரக்னன்ட் லேடியாக இருக்கக் கூடாதா? நல்ல வேலைக்கு போகிறவர்கள் யாருமே தவெகவில் இருக்கக் கூடாதா? எதுவுமே இல்லாமல், வேலை வெட்டி இல்லாமல் தண்டமாக ஒன்றும் இல்லாதவர்கள் மட்டும் தான் கட்சியில் இருக்க வேண்டுமா என்று நான் கேட்டேன்'' என பேசும் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment