பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சித் தலைவர் பதவி மற்றும் அதிகாரம் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருவகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமகவின் கவுரவ தலைவரும், ராமதாஸ் ஆதரவாளருமான ஜி.கே. மணி இன்று (16.09.2025) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்திய இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒரு கடிதத்தை காட்டி ஒரு பரபரப்பான செய்தியாக மக்களை நம்ப வைக்கிற செய்தியாக அரசியலில் ஒரு திசை திருப்புற நடவடிக்கையாக நேற்து ஒரு செயல் நடந்தது. அது மக்களை நம்ப வைக்கறதுக்கு திட்டமிட்டு செய்த ஒரு மோசடி என்று கூட அதனை சொல்லலாம். ஏன் அப்படின்னு சொன்னால், 30.07.2025 அன்று தேர்தல் ஆணையம் ஒரு கடிதத்தில் வெளியிட்டுருக்கிறது.
அந்த கடிதத்தில் சொல்லப்பட்டது பீகார், தமிழ்நாடு புதுச்சேரி மாநிலங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னம் என்று அந்த கடிதத்தில் இருக்கிறது. அந்த கடிதத்தினுடைய முகவரியில் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி , எண் 10, திலக் தெரு, தி நகர், சென்னை - 17 என்று இருக்கிறது. இந்த முகவரி மாற்றம் என்ற செய்தி என்பது ராமதாஸுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. ஏன்னென்றால் பாட்டாளி மக்கள் கட்சிக்கு நிரந்தரமான முகவரி சென்னையில் தலைமை அலுவலகமாக 63 நாட்டுமுத்து நாயக்கன் தெரு, தேனாம்பேட்டை, சென்னை. இது தான் பாட்டாளி மக்கள் கட்சிக்கு நிரந்தரமான முகவரி. ஆனால் நிரந்தரமா க இருந்த முகவரியை எப்படியோ திசை திருப்பி ஒரு சூழ்ச்சியினால் கபட நாடகத்தால் முகவரி மாற்றப்பட்டிருக்கிறது. அந்த முகவரி மாற்றப்பட்டதே மோசடி செய்தி. இப்போது நிரந்தரமான முகவரி எப்படி மாற்றப்படும்.
இப்போது வந்திருக்கிற கடிதம் தேர்தல் ஆணயத்தினுடைய கடிதம். பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தலைவர் பெயருக்கு. ஆனால் முகவரி தேனாம்பேட்டையில் இல்லாமல் திலக் தெர்ருவுக்கு (தி. நகருக்கு) போயிருக்கு. இது ஏமாற்று வேலை அதற்கு முன்னால் 09.09. 2025இல் தேர்தல் ஆணையம் ஒரு கடிதம் வெளியிட்டுருந்தது. அந்த கடிதத்தில் பாட்டாளி மக்கள் கட்சி 09.09. 2025 மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூடி அந்த பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் அனுப்பிய அடிப்படையில இதை பதிவு செய்து கொள்கிறோம் என்று கூறியுள்ளது. அது பதிவு செய்து கொடுக்கிறோம் என்று தான் சொல்லி இருக்கிறது.
இதுவும் முழுக்க யாரும் இல்லை. இதற்கு மூல காரணம் என்ன அப்படின்னு சொன்னால் அன்புமணி 25.08.2022 தலைவராக பொறுப்பேற்கிறார். அவருடைய பதவி காலம் 28.05.2025 யோடு முடிந்துவிட்டது. அப்போது அவரது பதவியே இல்லை. தலைவர் பதவியிலேயே இல்லாதவர் எப்படி பொதுக்குழு கூட்ட முடியும். அதுமட்டுமில்லாமல் பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு விதி 13இல் என்ன சொல்லப்பட்டிருக்கு என்று சொன்னால் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய ராமதாஸ் ஒப்புதல் இல்லாமல் நிர்வாகக் குழு, செயற்குழு, பொதுக்குழு உள்ளிட்ட மற்ற எந்த நடவடிக்கையும் செயல்படக்கூடாது அப்படிங்கறது தான் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய விதி.
இந்த விதியை மீறி ஒரு பொதுக்குழு கூட்டுவது எப்படி முடியும். அவர் 28.05.2025 முதல் பொறுப்பில் இல்லை. அதற்கு பிறகு 29.05.2025 அன்று பாட்டாளி மக்கள் கட்சியினுடைய நிர்வாக குழு கூடி ராமதாஸ் தான் தலைவராக இருக்க வேண்டும் என்று சொல்லி தேர்ந்தெடுக்கிறது. அதாவது பாட்டாளி மக்கள் கட்சியினுடைய நிறுவனராக இருந்த ராமதாஸ் 29.05. 2025 முதல் நிர்வாக குழுவால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் என்று அழைக்கப்படுகிறார். தலைவராக தேர்ந்தெடுத்தாச்சு அப்படியெனில் 30ஆம் தேதியிலிருந்து அவர் தலைவர்.
அவர் நிர்வாக குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்தான். அதையே பாட்டாளி மக்கள் கட்சியினுடைய செயற்குழு 08.07.2025 ஓமந்தூரில் கூடி செயற்குழு, நிர்வாக குழு எடுத்த முடிவை அங்கீகரிக்கிறது. அதன்படி செயற்குழுவாளும் ராமதாஸ் தலைவராக அங்கீகரிக்கப்படுகிறார். அதற்கு பிறகு 19.08.2025 இல் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு விழுப்புரம் மாவட்டம் பட்டானூர் சங்கமித்துரா அரங்கத்தில் கூடுகிறது. அந்த அரங்கத்தில் பொதுக்குழுவில் நிர்வாகக்குழு எடுக்கப்பட்ட முடிவு, அதை ஒட்டி ஒப்புதல் அளித்த செயற்குழுவினுடைய முடிவு இதையெல்லாம் முழு அதிகாரம் வாய்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு முழு மனதோடு அங்கீகரித்து ராமதாஸை தலைவராக ஏற்றுக் கொள்கிறது. எனவே பாட்டாளி மக்கள் கட்சியினுடைய நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் தான்” எனப் பேசினார்.