Advertisment

சாலையில் தரையிறங்க முயன்ற விமானம்; கார் மீது மோதி விபத்து!

usa-flight

அமெரிக்காவின் புளோரிடா மாகணத்தில் உள்ள மெரிட் தீவில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று (09.12.2025) இரவு கார் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அச்சமயத்தில், அங்கு வான் வழியாக சென்றுக் கொண்டிருந்த பீச்கிராஃப்ட் 55 என்ற சிறிய ரக விமானம் அவசரமாக தரையிறங்க முயன்றது. அப்போது அந்த விமானம் கார் மீது மோதி தரையிறங்கி இருக்கிறது. நல்வாய்ப்பாக இந்த விமானத்தில் பயணம் செய்த விமானி (வயது 27) உட்பட இருவர் காயம் இன்றி தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisment

அதே சமயம் விமானம் கார் மீது மோதியதில் காரில் சென்ற பெண் (வயது 57) ஒருவர் காயமடைந்தார். இதனையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது விமானம் கரை இறங்கிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் விமானத்தில் இன்ஜின் கோளாறு காரணமாக சாலையில் தரையிறக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

Advertisment

மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக அமெரிக்க விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பான ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) சார்பில் கூறுகையில், “நெடுஞ்சாலையில் விமானம் அவசரமாகத் தரையிறங்குவதற்கு முன்பு விமானி என்ஜினில் பிரச்சினைகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) விசாரணையை தொடங்கியுள்ளது. 

விபத்திற்குள்ளான விமானம் மெரிட் தீவில் இருந்து ஒரு பயற்சிக்காக (instructional flight) புறப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே விமானம் இரு என்ஜின்களிலும் கோளாறு ஏற்பட்டு செயலிழந்தது. இதனால் விமானி, விமானத்தை அருகிலுள்ள நெடுஞ்சாலையில் தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

car flight Florida highways incident viral video viral videos
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe