புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை அருகே உள்ள அம்மாசத்திரம் பகுதியில், சேலத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று வானில் பறந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் எதிர்பாராத விதமாகத் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டறிந்த விமானி, பயிற்சி விமானத்தை சாதுரியமாகவும், பத்திரமாகவும் புதுக்கோட்டைத் தேசிய நெடுஞ்சாலையில் தரையிறக்கியுள்ளார்.
முன்னதாக வானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தன. இருப்பினும் விமானத்தை ஓட்டி வந்த விமானி சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கியுள்ளார். அந்த விமானத்தில் 2 பேர் பயணித்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அச்சமயத்தில் தேசிய சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களுக்கு எவ்வித ஆபத்தும் இன்றி விமானம் தரையிறக்கப்பட்டது. எனவே நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
அதே சமயம் விமானம் தரையிறக்கப்பட்ட இடம் நெடுஞ்சாலை என்பதால் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், அப்பகுதி பொதுமக்கள் விமானத்தின் அருகே நின்று செல்பி எடுத்தும், புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் பயிற்சி விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் தரையிறங்கிய சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/13/pdu-flight-2025-11-13-15-56-59.jpg)