செங்கல்பட்டு மாவட்டம் திருப்பேரூர் அருகே உள்ள உப்பளம் பகுதியில் நேற்று (14.11.2025) மதியம் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியது. இதில் இருந்த பயிற்சி விமானி நல்வாய்ப்பாக பாராசூட் மூலமாக காயங்கள் இன்றி தரை இறங்கி உயிர் தப்பினார். இந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் இருந்த அனைத்து பாகங்களும் அடையாளம் தெரியாத அளவிற்கு சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது. பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் கீழே விழுந்து நொறுங்கிய விமானத்தைக் காண ஏராளமானோர் அங்கு குவிந்தனர். பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது குறித்து தகவல் அறிந்த உடனே சென்னையில் இருந்து வந்த ஹெலிகாப்டர் ஒன்றும் அங்கு தரையிறங்கியது. அதன் பின்னர் விமானி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் சம்பவ இடத்தில் இந்திய ராணுவ படையினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் வருகைபுரிந்து விமனத்தின் சிதறிய பாகங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தாசில்தார் சரவணன் உட்பட தலைமையில் 2 ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் சுமார் 10 அடி ஆழத்திற்கு உள்ளே புதைந்துள்ள விமானத்தை பாகங்களையும், இயந்திரங்களையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக விமானத்தில் முக்கியமான கருப்பு பெட்டியை தேடும் பணி நடைபெற்று வருகிறது. கருப்பு பெட்டியை மீட்டு உரிய ஆய்வு செய்யபட்ட பிறகே இந்த விமான விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தெரியவரும் எனக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/15/cgl-flight-jcb-2025-11-15-12-11-31.jpg)