மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக பதவி வகித்து வந்தவர் அஜித் பவார். இத்தகைய சூழலில் தான் பூனே மாவட்டத்தில் உள்ள பாராமதி என்ற இடத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகச் மும்பையில் இருந்து சிறிய ரக தனி விமானத்தில் இன்று (28.01.2026) பயணம் மேற்கொண்டார். அதன்படி இந்த் விமானம் காலை காலை 08.45 மணியளவில் பாராமதியில் தரையிறங்க முயன்றது. அப்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியதாக முதற்கட்ட தகவல் வெளியானது.
இந்த விபத்தில் சிக்கிய விமானம் தீ பற்றி எரிவது தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன. அஜித் பவார் பயணித்த விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த விபத்தில் அஜித் பவார் மரணம் அடைந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், “மும்பையிலிருந்து பாராமதிக்குச் சென்ற சார்ட்டர் விமானம் விபத்துக்குள்ளானது.
இதில் இருந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த விமானத்தில் மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார், மேலும் 2 உதவியாளர்கள் (தனி பாதுகாப்பு உதவியாளர் மற்றும் உதவியாளர்) மற்றும் 2 பணியாளர்கள் விமானத்தில் இருந்தனர். ஆரம்ப கட்ட தகவலின்படி, விமானத்தில் இருந்த யாரும் விபத்தில் இருந்து தப்பிக்கவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் விமான விபத்தில் சிக்கி துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட 5 பேர் உயிரிழ்ந்த சமபவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us