தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த கட்டமாக தொகுதிப்பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் வரும் 23 ஆம் தேதி தமிழ்நாடு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாஜக உயர்மட்டக்குழு ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''என்னுடைய யாத்திரை ஜனவரி 9ஆம் தேதி முடிய இருக்கிறது. அதில் பிரதமர் அல்லது உள்துறை அமைச்சரை அழைக்க நாங்கள் முடிவு எடுத்திருக்கிறோம். நாளைக்கு தேர்தல் வைத்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். அவ்வளவுதான். என்றைக்காவது முதலமைச்சரை பார்த்து உங்கள் கூட்டணி வலுவாக இருக்கா என ஏன் கேட்க மாட்டேங்கறீங்க.  இந்த 5 ஆண்டு கால ஆட்சியில் திமுக சொத்துவரி கூடி இருக்கு. மின்கட்டணத்தை கூட்டி இருக்காங்க, பாலியல் வன்கொடுமை நிறைய நடைபெற்று வருகிறது.

Advertisment

எத்தனையோ கொலைகள் நடந்திருக்கு. 7000க்கு மேற்பட்ட கொலைகள் நடந்திருக்கிறது. 10 வயது சிறுமி முதல் 70 வயது பெண்கள் வரை ரோட்டில் நடமாட முடியவில்லை. கள்ளக்குறிச்சியில் 65 பேர் செத்துருக்கறாங்க. 41 பேர் கரூரில் தவெக கூட்டத்தில் நசுங்கி இறந்திருக்காங்க. எங்கே பார்த்தாலும் கஞ்சா, போதைப் பொருட்கள் இருந்துட்டு இருக்கு. தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை போட்டுருக்காங்க. ஜனவரி 23 ஆம் தேதி அவர் தமிழகம் வருவதாக இருக்கிறது'' என்றார்.