மேற்கு வாங்க மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அம்மாநில அரசு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி, மாநிலத்தின் முக்கிய நகரங்களின் சந்திப்புகளில் பிங்க் பூத்துகள் அமைக்கப்படும். இந்த பூத்துகள் நள்ளிரவு வரை செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் வேலை நிமித்தமாக வெளியில் செல்லும், பெண்களுக்கு உதவி தேவைப்படும் பட்சத்தில் இந்த மையங்களை அணுகலாம்.
இதன் மூலமாகக் காவல்நிலையத்தில் உள்ள பெண் காவல் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, சைனிங் என்ற பெயரில் அனைத்து மகளிர் மொபைல் ரோந்து படைகள் பெண்களின் பாதுகாப்பிற்காகச் சாலைகளில் நிறுத்தப்படும். இந்த ரோந்து படைகள் இரவு 8 மணி முதல் அதிகாலை 2 மணி வரை பணியில் இருக்கும். குறிப்பாக, இவர்கள் இரவு நேரங்களில் பணிபுரியும் பெண்கள் அடிக்கடி பயன்படுத்தும் முக்கிய சாலைகளில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா மிக நீண்டகாலமாக நாட்டின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. நாட்டின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான கொல்கத்தாவில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாவதற்காக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இதற்கு முன்பும் கூட பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/01/wb-pink-booth-2026-03-01-14-52-16.jpg)