Advertisment

“அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும்” - பிரதமர் மோடிக்கு முதல்வர் கடும் கண்டனம்!

modi-mks

பீகார் மாநிலத்தில், வரும் நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி, அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று நவம்பர் 14ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அந்த வகையில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. 

Advertisment

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் மாநிலம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசுகையில், “தமிழ்நாட்டில் திமுகவினர் பிகரை சேர்ந்த உழைக்கும் மக்களை துன்புறுத்துகின்றனர் என பேசி இருந்தார். இந்நிலையில் இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழக முதல் மு க ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மோடி அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன். 

Advertisment

ஒடிசா - பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Assembly election campaign Bihar b.j.p dmk Narendra Modi mk stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe