Advertisment

பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம்; பெருவளப்பூர் கிராம நிர்வாக அலுவலர் கைது!

Vao

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, பெருவளப்பூர், சாமிநாதபுரத்தைச் சேர்ந்த இந்திராகாந்தி என்பவர் பெருவளப்பூர் கிராமத்தில் உள்ள கட்டிடத்துடன் கூடிய வீட்டு மனைக்கு பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். அதன் பேரில் புகார்தாரர் இந்திராகாந்தி, திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, பெருவளப்பூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் மோகனபூபதி என்பவரை தேதி சந்தித்து மனு தொடர்பாக கேட்டபோது பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.2000/- லஞ்சமாக கேட்டுள்ளார். 

Advertisment

அது தொடர்பாக இந்திராகாந்தி திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், காவல் ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பொறி வைப்பு நடவடிக்கையின் போது புகார்தாரர் இந்திராகாந்தியிடமிருந்து லஞ்சப்பணம் இரண்டாயிரத்தை பெருவளப்பூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் மோகனபூபதி கேட்டு பெற்று வைத்திருந்த போது கையும் களவுமாக பிடிபட்டார். இது தொடர்பாக பெருவளப்பூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisment
Bribe trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe