கோப்புப்படம்
சென்னையில் அரசியல், மதம், சங்கம் மற்றும் பல்வேறு நிகழ்வுகளுக்கான தற்காலிக கொடிக் கம்பங்களை நடுவதற்கும், சிலைகளை வைப்பதற்கும் உரிய அனுமதி பெற வேண்டும் எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதற்கு ஆன்லைன் வாயிலாகப் பதிவு செய்வது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி உரிய அனுமதியைப் பெற வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது. இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடிக் கம்பங்களை நடுவதற்கு மாநகராட்சியின் உதவி ஆணையர் அனுமதி அளித்த பின்பு குறுஞ்செய்தி மூலம் மனுதாரருக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.
அதிலும் குறிப்பாக மதம் சார்பான நிகழ்வுகளுக்குக் கொடிக் கம்பங்களை நடுவதற்கு 7 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மதம் சார்பற்ற நிகழ்வுகளுக்குக் கொடிக் கம்பங்களை நடுவதற்கு 3 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us