ஒரு வாரம் அரசுமுறை பயணமாக நாளை காலையில் சென்னையில் இருந்து புறப்பட்டு துபாய் வழியாக ஜெர்மன் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதற்காக இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உட்பட 10 பேர் பயணிக்கின்றனர். முதல்வர் செல்வதையொட்டி, இன்று சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், 'உலகமயமாகிறார் பெரியார்' எனும் தலைப்பில், இன்று தனது சமூக வலைதளத்தில், "ஆதிக்கம்தான் என் எதிரி" என முழங்கிச் சாதியாலும் பாலினத்தாலும் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகச் சுற்றிச் சுழன்று பரப்புரை செய்த தந்தை பெரியார் அவர்கள் உலகம் முழுமைக்குமானவர்!
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டினையொட்டி உலகப்புகழ் பெற்ற #Oxford பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 4 அன்று நடைபெறும் கருத்தரங்கினில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் உருவப்படத்தினைத் திறந்து வைத்து, தென்னக மயக்கம் தீர்த்த சுயமரியாதை இயக்கம் குறித்த இரு நூல்களையும் பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் முன்னிலையில் வெளியிடுகிறேன்.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; பெரியாரியம் உலகத்தவர்அனைவருக்கும்-என்று பதிவிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.