மகாகவி சுப்ரமணிய பாரதியின் 144-வது பிறந்த நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் அரசு மற்றும் அரசியல் இயக்கங்கள்  சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் 28 ஆம் ஆண்டு  பாரதி விழா நிகழ்வில் தொல்லியல் அறிஞர் முனைவர் கா.ராஜன் அவர்களுக்கு ₹50,000 பொற்கிழியுடன்‌ கூடிய ' பாரதி விருது ' மற்றும் தகுதிப் பட்டயம் வழங்கப்பட்டது. விருதினை தமிழ்நாடு அரசின் மேனாள் தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு அவர்கள் வழங்கினார். மகாகவி சுப்ரமணிய பாரதியின் 144-வது பிறந்தநாளையொட்டி

Advertisment

உடன் மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி ஐஏஎஸ், தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் எஸ்கேஎம்.மயிலானந்தன், ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் இ.மான்விழி மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் இருந்தனர்.

Advertisment