ஈரோடு மாவட்ட திமுகவில் சமீபத்தில் இணைந்த சமூக சேவகர் கே.என்.ஆர்.ராஜா என்பவர் அந்த பகுதியில் ஈரோடு அருகே உள்ள கனிராவுத்தர் குளம், எல்லப்பாளையம் பகுதியில் மக்கள் சேவை மையம் என்ற அலுவலகத்தை திறந்துள்ளார்.
இந்த அலுவலகத்தை அமைச்சர் முத்துச்சாமி திறந்து வைத்தார். இந்த அலுவலகத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் ரேசன் கார்டு, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், தாலுகா அலுவலகங்களில் சரி செய்து கொள்ள வேண்டிய குறைபாடுகளை இங்குள்ள தன்னார்வலர்கள் மனுக்களை வாங்கி அந்த மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்த சேவை மையத்தை நடத்துகிறார்கள். இதைப் போன்ற சில சேவை மையத்தினை திமுகவினர் ஈரோட்டில் நடத்தி வருகின்றனர்.
எளிய மக்கள் மத்தியில் இந்த சேவை மையம் வெகுவான பாராட்டினைப் பெற்று வருகிறது. அவர்களின் அலைச்சலை குறைத்து அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்க வழி செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகத்தான் திமுகவில் இணைந்த சமூக சேவகர் கே.என்.ஆர்.ராஜா இந்த சேவை மையத்தினை தொடங்கியுள்ளார்.