Advertisment

“எந்தக் காலகட்டத்திலும் மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்” - இ.பி.எஸ்.-ஐக் கடுமையாகச் சாடிய கனிமொழி எம்.பி.!

eps-modi-kanimozhi

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டியில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பில் திமுகவின் டெல்டா மண்டல மகளிரணி மாநாடு இன்று (26.01.2026) நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு பேசுகையில், “பிரதமர் மோடி எலக்ஷன் சீசனுக்கான ஒரு டூரிஸ்ட் பிரைம் மினிஸ்டர் தான் நம்முடைய பிரதமர் அதனால அந்த டூரிஸ்ட் பிரைம் மினிஸ்டர் சமீபத்திலே தமிழகம் வந்து 45 நிமிடம் பேசினார். அந்த 45 நிமிடத்தில் பலமுறை முதலமைச்சருடைய பெயரை சொன்னார். 

Advertisment

திராவிட முன்னேற்ற கழகத்தின் பெயரை சொன்னார். பல எதிர்கட்சிகளின் பெயரை எல்லாம் சொன்னார். ஆனால் ஒரே ஒரு கட்சியின் பெயரை மட்டும் சொல்லவில்லை. அது அதிமுக மேடையிலே எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். 45 நிமிடம் பேசிய பிரதமர் அவருடைய கட்சியின் பெயரை சொல்லவே இல்லை. எங்களுக்கெல்லாம் என்ன கவலை என்றால் உங்கள் பெயர் சொல்லாத பெயராகவே போயிற போகிறது. தயவு செய்து ஜாக்கிரதையாக இருங்கள். அப்படி ஒரு கட்சியின் பெயரையே நிராகரிக்க கூடிய இடத்தில் நீங்கள் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். 

Advertisment

தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறீர்கள். இப்போது, உங்களை ஆளாக்கிய இயக்கத்திற்கு கட்சிக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறீர்கள். பழனிசாமி அவர்களே மக்கள் நிச்சயமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த காலகட்டத்திலும் உங்களை மன்னிக்க மாட்டார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” எனப் பேசினார். இந்த மாநாட்டில் கனிமொழி எம்.பி. உரையாற்றிக் கொண்டிருந்தபோது, இரும்பல் ஏற்பட்டதால் சிறிது நேரம் பேச்சை நிறுத்தினார். அதன் பின்னர் மீண்டும் பேசத் தொடங்கிய அவர், “மன்னிக்க வேண்டும். கடந்த இரண்டு மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை. இருந்தாலும், உங்களை பார்க்க வேண்டும் என்று அப்பா சொன்ன வழியில், அண்ணன் கூறியதால் இங்கேயே வந்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

dmk admk edappadi k palaniswami kanimozhi Narendra Modi Tanjore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe