தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எட்டயபுரம் சாலையில் உள்ள அரசு நூலகத்தினை விரிவாக்கம் செய்ய வேண்டும், டிஜிட்டல் நூலகம் அமைக்க வேண்டும்,அரசு போட்டிக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகத்திற்கு அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் நூலகத்தினை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் சமூக ஆர்வலர்கள் இணைந்து மக்களின் பங்களிப்புடன் நூலகத்தினை விரிவாக்கம் செய்து, அரசு போட்டிக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டிடம் கட்ட போவதாகவும் இதற்கான கட்டிட பணிகள் தொடக்க விழா வரும் ஜனவரி 1ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதற்கான அழைப்பிதழை கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹீமன்சூ மங்களிடம் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் 7 வகையான பழங்கள் அடங்கிய சீர் வரிசை தட்டுடன் அழைப்பிதழை வழங்கினர்.இதனை தொடர்ந்து தாசில்தார் அலுவலகத்தில் அழைப்பிதழை வழங்கினர். தொடர்ந்து நகராட்சி ஆணையரிடம் அழைப்பிதழ் வழங்க சென்றனர். அப்போது நகராட்சி ஆணையர் அறை பூட்டப்பட்டு இருந்ததால் அழைப்பிதழை வாசலில் வைத்து விட்டு சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/23/dsc_9492-2025-12-23-17-29-16.jpg)
கோவில்பட்டியில் உள்ள அரசு நூலகத்தினை விரிவாக்கம் செய்ய வேண்டும்,, அரசு போட்டிக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும். அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தினை முன்னாள் இராணுவ வீரர்கள் சங்கத்தினர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனர். இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இடம் மீட்கப்பட்டுள்ளது. அவர்கள் கட்டிய கட்டிடத்திற்கு நகராட்சி விதித்த வரி விதிப்பும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
மாவட்ட ஆட்சியரிடம் மேல் முறையீடு இருப்பதாக கூறி அந்த அரசு புறம்போக்கு நிலத்தினை கையகப்படுத்தி நூலகத்தினை விரிவாக்கம் செய்யமால் அரசு கால தாமதம் செய்து வருவதால் கோவில்பட்டி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் மக்களின் பங்களிப்புடன் நூலகத்தினை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து வரும் ஜனவரி 1ம் தேதி பணிகள் தொடங்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்கான அழைப்பிதழ்களை வெற்றிலை பாக்கு பழமும் அடங்கிய சீர்வரிசை பொருட்களோடு அரசு அதிகாரிகளை விழாவிற்கு வரும்படி அழைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர் நகர சமூக ஆர்வலர்கள் . இப்படி மக்கள் சீர் தட்டு மரியாதையோடு அதிகாரிகளை அழைத்த சம்பவம் கோவில்பட்டி நகரின் புருவங்களை விரிய வைத்துள்ளது.
Follow Us