ரேசன் கடைகளில் கை ரேகை பதிவு, கண் பதிவுகளை வைத்து பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் கிராமங்களில் இணைய சேவை சரியாக கிடைக்காததால் கை ரேகை, கண் பதிவுகளும் இயந்திரம் ஏற்றுக் கொள்ளாமல் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

Advertisment

அதே போல், இன்று விராலிமலை தொகுதியில் எஸ்ஐஆர் பதிவுகள் குறித்து தங்கள் கட்சி நிர்வாகிகளை சந்திக்க அதிமுக மாஜி விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ சென்ற போது குன்னத்தூர் கிராமத்தில் உள்ள ரேசன் கடை வாசலில் ஏராளமான பெண்கள் நிற்பதைப் பார்த்து காரில் இருந்து இறங்கிச் சென்ற ஏன் இவ்வளவு கூட்டம் என்று கேட்க, பல மணி நேரமா சிக்னல் கிடைக்கலனு பொருட்கள் தரல அதான் நிற்கிறோம் என்று கூற உடனே அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

Advertisment

அடுத்த அரைமணி நேரம் கடந்து வந்த போதும், அந்த மக்களளுக்கு பொருள் கிடைக்கவில்லை என்று சொல்ல மறுபடியும் கூட்டுறவுத் துறை உயர் அதிகாரிகளிடம் பேசிய பிறகு  பல மணி நேரமாக காத்திருந்த அனைவருக்கும் பொருட்கள் கிடைத்துள்ளது. அதிமுக மாஜியின் செயலால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.