மக்கள் சிந்தனைப் பேரவையின் 28ஆம் ஆண்டு  பாரதி விழா நிகழ்வில் தொல்லியல் அறிஞர் கா.ராஜனுக்கு ரூ. 50 ஆயிரம் பொற்கிழியுடன்‌ கூடிய ‘பாரதி விருது’ மற்றும் தகுதிப் பட்டயம் வழங்கப்பட்டது. 

Advertisment

இவ்விருதினை தமிழ்நாடு அரசின் மேனாள் தலைமைச் செயலாளர் இறையன்பு வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி, தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் எஸ்.கே.எம். மயிலானந்தன், ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இ. மான்விழி மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் உள்ளனர்.

Advertisment

ed-bharathiyar-school-celebration

மேலும், பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தில் உள்ள பாரதியார் படிப்பகத்தில் உள்ள பாரதியார் உருவ சிலைக்கு அரசு பள்ளி மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.